Wednesday, July 15, 2015


பெருங்காமம் பூக்கின்றது

நான்கு தசாப்தங்கள்

நகன்று விட்டதின் அடையாளத்தை 
அவள் முந்ந ரை சொல்லிற்று

முதலிரண்டு தசாப்த உறவுகள்
வெளுத்து விட்ட  கருமுடியாய்
காணாமல் போயிருந்தனர்
சிலநேரம் பௌதீகமாகவும்
பலநேரம் பௌதீகமாகவும்

இருபது வயது இளைஞன்
திடீரென அம்மாவாகி
எனக்கொருநாள் 
நண்டூறுது நரியூறுது சொன்னபோது
 பூட்டியிருந்த சிரிப்பு முகமூடிகள்
உதிர்ந்து
சிரிப்பு  முதல் பூவாய்
பூத்து வாசம் வீசியது

பசியறிந்து உணவை 
ஊட்டிய போது அம்மா
இளைஞனுக்குள் வந்திருந்தாள்
அவன் அம்மாவாகிப் போனதை 
புரிய வைக்க முடியாமல் போன
அவஸ்தையிலும்
விழுங்கிய உணவு
கண்ணன் கைப்பருக்கையாய் 
எல்லாவற்றையும் நிரப்புகின்றது

கண்ணனை கட்டி அணைக்கின்றேன்
காதல் உதிர்ந்து
அம்மாவின் முலை ஈந்த 
பெருங்காமம் தீயாய் பூக்கின்றது

தாத்தனின் தழுவலில் இருந்த 
அவன் அம்மா முகம்
தங்கையின் சிரிப்பு
காதலியின்  மீண்டுமொரு பிறப்பு
எல்லாம் தீப்ப்பூவின் வாசத்தில் 
வெளிச்சமாகிக் கொண்டிருந்தது



No comments:

Post a Comment